வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (01/10/2015)

கடைசி தொடர்பு:13:33 (01/10/2015)

கேஜ்ரிவாலை அக்‌ஷய்குமார் சந்திக்கக் காரணம் என்ன? பாலிவுட்டில் அடுத்த பரபரப்பு!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்துப் பேசியுள்ளார், 30 நிமிடம் நீடித்த இந்த திடீர் சந்திப்பு, பாலிவுட்டில் அனைவரையும் பெரும் பரபரப்புக்கு ஆளாக்கியுள்ளது.

பிரபு தேவா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்து,அக்டோபர் 2 அன்று ரிலீஸாக உள்ள படம் "சிங் ஈஸ் ப்ளிங்" இப்படத்தின் புரமோசன் வேலைகளில் பிஸியாக உள்ள அக்‌ஷய் குமார் திடீரென கேஜ்ரிவாலை சந்தித்து, மகாராஷ்டிர மாநிலத்தில், வறுமையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் பற்றியும், அவர்களுக்கு உதவுவது பற்றியும் பேசியுள்ளார்.

முன்னதாகவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிவரும் அக்‌ஷய், மேலும் அவர்களுக்கான நிதியை திரட்டுவதில் முழுமூச்சாக இறங்கியுள்ளார். இதற்காக ஆலோசிக்கவே கேஜ்ரிவாலை சந்தித்துள்ளார், இதை பற்றி கேஜ்ரிவால் கூறுகையில் "அக்‌ஷய் குமாரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது, மேலும் அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்". எனக் கூறியுள்ளார்.

-பிரியாவாசு -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்