பாடகியாகிறார் ஐஸ்வர்யா ராய் பச்சன்!

 உலக அழகியாக இருந்து, நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன், மிகப்பெரிய நடிகையாக ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். ஜேம்ஸ் பாண்ட் பட வாய்ப்பையே நிராகரித்த நாயகி என்பது இவரின் தனிச்சிறப்பு. இடையில் திருமணம், பின்னர் குழந்தை என குடும்ப வாழ்வில் ஈடுபட்டார் மீண்டும் இப்போது நடிக்க வந்துள்ளார்.

ஜஸ்பா படத்தின் மூலம் தனது அடுத்த ரவுண்டைத் துவக்கியுள்ள ஐஸ்வர்யா ராய்  அப்படத்தின் கஹானியான் பாடலில் இவர் செய்யும் உடற் பயிற்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 41 வயதாகும் நடிகையா என கேள்விகளை எழுப்பியதோடு பலரும் ஹீரோயினாக நடிக்கக் கேட்டு ஐஸ்வர்யா ராயின் வீட்டைத் தட்டத்துவங்கியுள்ளனர். அதே படத்தின் மற்றொரு பாடல் மூலம் தனது குரல் திறனையும் நிரூபிக்கவிருக்கிறார்.இதே ஜாஸ்பா படத்தின் பந்தெயா எனப்படும் ஒரு பாடலைப் பாடவிருக்கிறார். ஏற்கனவே இந்தப் பாடல் ஜுபின் நவுதியால் பாட ஆண் குரலில் வந்துவிட்டது. 

படத்தின் புரமோஷன் கருதி தற்போது ஐஸ்வர்யா ராயும் பாடவிருக்கிறார். இப்பாடலின் டீஸர் ஓரிரு தினங்களில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஐஸ்வர்யா ராய் பாடப் போகும் பாடல் இதுதான் : 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!