வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (07/10/2015)

கடைசி தொடர்பு:13:43 (07/10/2015)

புலியிடம் மாட்டிய அமிதாப்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை புலி ஒன்று 4 கிலோ மீட்டர் தூரம் விரட்டி வந்துள்ளது. அமிதாப்பச்சனே இந்த படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மும்பை நகரின் மேற்கு பகுதியில் உள்ள போரிவிலியில்  சஞ்சய் காந்தி வனச் சரணாலயம் உள்ளது. இங்கு நடந்த  புலிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, பாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சன் சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் ஒரு புலி ரோட்டில் நின்றுள்ளது. அமிதாப்பச்சன் சென்ற வாகனத்தை பார்த்த அந்த புலி, சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனத்தை விரட்டி பின்னால் வந்துள்ளது. இதனை புகைப்படமாக எடுத்து அமிதாப்பச்சன், அதனை  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

''மும்பை நகருக்குள்  இது போன்ற ஒரு வனத்தை பார்க்க முடிகிறது. ஒரு புலி எனக்கு கம்பெனி கொடுக்கிறது'' என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் அமிதாப்பச்சனை, புலிகளை காப்பதற்கான தூதுவராக மகாராஷ்ட்ர அரசு நியமித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்