இணையத்தை அதிர வைத்த ஸ்ரீதேவி மகள்?

ஸ்ரீதேவியின் மகள் தெலுங்கில் துல்கர் சல்மானுடன் நடிக்கவுள்ளார் என்ற செய்தி அனைவரையும் பரபரப்பாக்கியது.  ஆனால் ஸ்ரீதேவி அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

தற்போது அவரது இரண்டாவது மகள் குஷி பற்றிய செய்தி இணையத்தை அதிர வைத்துள்ளது. அமெரிக்க பாப் பாடகர் ஜாக் கிலின்ஸிக்கு அவர் கொடுத்த முத்தம் தான் இதற்கு காரணம், இதனை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவு செய்துள்ளார். 

ஏன் வாழ்கையில் மிக சிறந்த தருணம் இது தான் என குஷி ட்விட்  செய்ய, புகைப்படம் தற்போது வைரலாக மாறியிருக்கிறது. ஜாக் கிலின்ஸியின் 'வைல்ட் லைஃப்' என்ற 2014 வெளிவந்த ஆல்பம் அனைவராலும் வெகுவாக புகழப்பட்ட ஒன்றாகும். மேலும் ஜாக்குக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் அதிகம். அதில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரும் ஒருவர்.
 

- பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!