இளம்பெண்களிடம் ஏமாந்த சல்மான்கான்?

மும்பையில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்றில் சல்மானின் ரசிகைகள் என்று சொல்லிக்கொண்டு 4 பெண்கள், அவரிடமே கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு இரவு நேர கேளிக்கை விடுதிக்கு வந்த சல்மான்கானிடம் அவரது பெரிய ரசிகைகள் என அறிமுகமாகி 4 பெண்களில் ஒருவர் சல்மானிடம் பேச்சு கொடுக்க, மற்ற மூன்று பெண்கள் சல்மானின் பர்ஸ், பென்டன்ட், கண்ணாடி என அனைத்தையும் சுருட்டுவதில் மும்மரமாக இருந்துள்ளனர்.அவர்கள் சென்ற பின் தான் இதை உணர்ந்துள்ளார் சல்மான்கான்.

பின்பு இது பற்றித் தெரிய வந்தவுடன் சல்மானின் பாதுகாவலர் போலீஸில் புகார் அளிக்க கூறியபோது, சின்ன திருட்டு தானே, வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் சல்மான். இதுபோல் முன்பு நடிகை சுஷ்மிதா சென் மற்றும் ஸ்ரேயா இருவுக்கும் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரேயா, சுஷ்மிதா சென்னைத் தொடர்ந்து தற்போது சல்மான் கானுக்கும் நடந்ததைப் பார்க்கையில் மும்பையில் இரவு நேரங்களில் மிகவும் ஆபத்துகள் இருப்பது தெளிவாக தெரிகிறது. மேலும் தக்கப் பாதுகாப்புடன் இருக்கும் நடிகர்களுக்கே இந்த நிலை எனில் மற்றவர்கள் நிலை என்ன? 

-பிரியாவாசு - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!