எதிர்பார்ப்பில் ’நயன்தாராவின் நெக்லஸ்’! | 'Ahalya' makers back with another short film 'Nayantara's Necklace' starring Konkona and Tilotama

வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (08/10/2015)

கடைசி தொடர்பு:13:15 (08/10/2015)

எதிர்பார்ப்பில் ’நயன்தாராவின் நெக்லஸ்’!

 ராதிகா அப்தே நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற அகல்யா குறும்படக்குழு மீண்டும் அடுத்த குறும்படம் ஒன்றை வெளியிடவிருக்கிறார்கள். அந்தக் குறும்படத்திற்கு நயன்தாரா’ஸ் நெக்லஸ் எனப் பெயரிட்டுள்ளனர். 

இந்தக் குறும்படத்துக்கான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இருமுறை தனது நடிப்பிற்காக தேசியவிருதுகளையும், மேலும் பல விருதுகளைப் பெற்ற நடிகையுமான கோன்கொனா சென் ஷர்மா இந்தப் படத்தின் நாயகியாக நடித்துள்ளார். 

 

டிரெய்லரில் இரு குணங்கள் கொண்ட பெண்கள் அவர்களின் நட்பு, மற்றும் சமூக வலைகளின் நட்பு என கொஞ்சம் திருமணமான பெண்களின் வேறு ஒரு உலகைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. ஏற்கனவே இவர்களது அகல்யா குறும்படம் இந்திய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நயன்தாரா’ஸ் நெக்லஸ் டிரெய்லருக்கு: 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close