தன் மார்க்கெட்டை நிலைநிறுத்த அரை நிர்வாண போஸ் கொடுத்த நடிகை?

அமீர்கான் மனைவி கிரண்ராவின் உறவினர் பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை அதிதிராவ் ஹைதரி. இவர் பாலிவுட்டில் பல படங்களில் கவர்ச்சிக்கென்றே தனி இடம் ஒதுக்கி நடிப்பவர். அமிதாப்பச்சன், இர்பான்கானுடன் இவர் நடித்துள்ள  படம் விரைவில் ரிலீஸாக காத்திருக்கிறது.

இந்த நிலையில் அதிதிராவ் ஹைதரி பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்துக்கு அரை நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மேலாடை இல்லாமல் அவர் படுத்திருப்பது போன்ற காட்சி அட்டைப் படமாக வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே, ஒரு பத்திரிகைக்கு நீச்சல் உடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார். இப்போது ஒருபடி மேலே சென்று மேலாடை இன்றி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

ஆனால் இந்தப் படங்களுக்கு இணையத்திலோ, அவரின் ரசிகர்கள் மத்தியிலோ எந்தவித எதிர்ப்பும் ஏற்படவில்லை. அவரின் கவர்ச்சி மிகு கண்கள் தான் இதற்குக் காரணமாம். ஏனெனில் அவரின் முக பாவனையும், கண்களும் அவரை ரசிக்க மட்டுமே வைக்கிறது என்று கொட்டித் தீர்க்கிறார்கள் இணைய ரசிககோடிகள்.

ரசிகர்கள் ஒருபுறம் இப்படிப் பேசிக்கொண்டிருக்க, பாலிவுட்டில் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தவேண்டும் என்பதற்காகவும், எப்போதும் பரபரப்புடன் தன்னைப் பற்றிப் பேசவேண்டும் என்பதற்காகவும் இவ்வாறான புகைப்படங்களை வெளியிடுவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

பாலிவுட்டில் போட்டிகள் அதிகரித்துவருவதால் இவ்வாறான முயற்சிகளில் நடிகைகள் இறங்குவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. தீபிகா, கரீனா, காத்ரீனா, ராணிமுகர்ஜி உள்ளிட்ட பலரும் இவ்வாறாக பத்திரிக்கைகளுக்கு அரைநிர்வாண போஸ் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!