மாடலிங் துறையில் பெண்கள் சந்திக்கும் சோகங்கள்-.வெளிப்படுத்தும் நடிகை!

கேலண்டர் கேர்ள்ஸ் இந்திப் படம் பல சர்ச்சைகளைக் கடந்து மாடலிங் உலகில் நடக்கும் பிரச்னைகளை பல அதிர்ச்சிகளுக்கு மத்தியில் எடுத்து வைத்துள்ளது. இதற்கு முன் வெளியான ஹீரோயின், ஃபேஷன் உள்ளிட்ட படங்களைப் போல் இந்தப் படமும் சினிமா, மாடலிங் உலகில் பெண்களுக்கான சங்கடங்களை எடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ஐந்து நாயகிகளில் இருவரான சதாருபா பைனே, மற்றும் அகன்ஷா புரி அளித்த பேட்டியில் தாங்களும் மாடலிங் துறைக்குள் நுழைகையில் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்திக்கத்தான் செய்தோம் என வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.

பல ஏஜண்டுகள் இந்தத் துறையில் ஏமாற்றக் காத்திருக்கிறார்கள்.மேலும் புதிதாக நடிக்க வரும் இளைஞர்களுக்கு ஒன்றே ஒன்று தான் சொல்லிக்கொள்கிறோம். உங்களை நடிக்க வைக்கவோ, அல்லது மாடலிங் துறையில் வாய்ப்புக் கொடுக்கவோ நடக்கும் சந்திப்புகள் கண்டிப்பாக ஹோட்டலிலோ, அல்லது காபி ஷாப்பிலோ நடக்காது.

பல ஏஜண்டுகள் பணம் பறிக்கவும், பெண்களை விற்கவும் தங்களை தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் அறிமுகப்படுத்திக்கொண்டு உங்களை ஏமாற்றக் கூடும் எனவும் தங்கள் அனுபவங்கள் வாயிலாக வெளிப்படையாகக் கூறியுள்ளனர். மேலும் சதாருபா பேசுகையில் எனது மாடலிங் துறை ஆரம்ப கட்டத்தில் எனக்கு நடந்த விதி இப்படத்தில் நடிக்கப் பெரும் உதவியாக இருந்ததாகவும் கொஞ்சம் வருத்தம் கலந்தே சொல்லியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!