அந்தப் படம் ஃப்ளாப் ஆகும்...அமிதாப் பச்சன் ஓப்பன் டாக்!

அக்டோபர் 11 அன்று தனது 73 வது பிறந்தநாளைக் கொண்டாடிய பாலிவுட்டின் பிக் பி என அழைக்கப்படும் அமிதாப் பச்சன், தன் வாழ்க்கை வரலாறைப் படமாக எடுப்பதை தான் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் தற்போது 'பயோபிக்' படங்கள் எடுப்பது ட்ரெண்ட்  ஆகி வருகிறது, டார்ட்டி பிக்சர், மேரி கோம் போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நிறைய பயோபிக் படங்கள் வெளிவந்து வெற்றி அடைந்துள்ளன.

அமிதாப், தன்னுடைய வாழ்க்கை வரலாறு படமாக எடுப்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும், அதற்காக இயக்குநர்கள் முயற்சிக்க வேண்டாம் என்றும் ஒரு ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார், அப்படியே அது நடந்தால் அந்தப் படம் நிச்சயம் தோல்வியடையும் எனவும் கூறியுள்ளார்.

தனது தந்தையான ஹரிவன்ஷ் ராய் பச்சன் பற்றிய படம் உருவாவதில் தனக்கு விருப்பம் உள்ளதையும் தெரிவித்துள்ளார். ஹரிவன்ஷ் ராய் பச்சன், பத்ம பூஷன் விருது பெற்ற இந்திய எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!