வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (13/10/2015)

கடைசி தொடர்பு:13:29 (13/10/2015)

ஆஷிக் 2 ஜோடியின் நடிப்பில் ஓகே கண்மணி ரீமேக்?

 மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 17ம் தேதி வெளியான படம்  ஓகே கண்மணி. திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவிங் டு கெதர் கான்செப்டைக் கொண்டு எடுக்கப்பட்ட படம். தற்போது இந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே தெலுங்கில் டப்பாகி வெளியான ஓகே கண்மணி இப்போது பாலிவுட்டிற்கும் செல்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்திp படங்கள் தமிழிலும், தமிழில் வந்த படங்கள் இந்தியிலும் மொழிபெயர்த்தோ அல்லது ரீமேக் செய்யப்படுவது புதிதல்ல. முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே, ஆயுத எழுத்து, ராவணன் போன்ற படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்தன.

தற்போது ஓகே கண்மணி படத்தினை ஷாத் அலி இயக்கத்தில் ஆஷிக் 2 புகழ் ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஷ்ரதா கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. முன்பு கதாநாயகன் ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாக சோனாக்‌ஷி  சின்ஹா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.இந்த ஜோடி தாவ்த் இ இஷ்க் படத்தில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. எனினும் ஆஷிக் 2 ஷ்ரதா கபூரை யாராலும் ஈடுகட்ட முடியாது. 

எனவே ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாக ஷ்ரதா நடிக்கலாம் எனத் தெரிகிறது. முன்னதாக அலைபாயுதே ரீமேக் சாத்தியா, அங்கு நன்கு வரவேற்பைப் பெற்ற நிலையில் ஓகே கண்மணி ரீமேக் அங்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- பிரியாவாசு- 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்