வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (14/10/2015)

கடைசி தொடர்பு:14:01 (14/10/2015)

தீபிகா படுகோனேவை ஓரம் கட்டிய ஸ்ருதி ஹாசன்!

வெல்கம் பேக் படத்தில் ஜான் ஆபிரகாமுடன் இணைந்து நடித்த ஸ்ருதி ஹாசன் மீண்டும் ஜான் ஆபிரகாமுடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளார்.

ஜான் ஆபிரகாம் நடிக்க உள்ள ராக்கி ஹேண்ட்சம் படத்தில் தான் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் காதாநாயகி கேரக்டரில் பிபாசா பாசு, தீபிகா படுகோனே, மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோரின் பெயர்கள் சுற்றலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் முன்னணி ஹீரோயின்களையே தற்போது ஓரம் கட்டியுள்ளார் ஸ்ருதி ஹாசன். படத்தை இயக்குகிறார் நிஷிகாந்த் கமத். இவர் அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடித்த த்ரிஷ்யம் ரீமேக் படத்தை சமீபத்தில் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராக்கி ஹேண்ட்சம் படம் கொரியாவின் தி மேன் ஃப்ரம் நோவேர் படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட உள்ள படம். இந்தப் படம் பலராலும் பாரட்டப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்