சில்வெஸ்டர் ஸ்டாலன் இந்தியா வராதது ஏன்?

பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர்ஸ்டாலன் இந்து முறைப்படி தனது மகனிற்கு திதி கொடுக்க தனது குடும்பத்தினரை ஹரித்வாருக்கு  அனுப்பிவைத்துள்ளார்.

2012 ஆம் வருடம், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இறந்து போன தனது 36 வயது மகன் 'சாகா'வின் மரணம்  சில்வெஸ்டர் ஸ்டாலனை மிகவும் பாதித்தது, இதனால் மிகவும் கவலையில் இருந்த அவர் தனது குடும்பத்தாரிடம் இந்து முறைப்படி திதி கொடுக்கச் சொல்லியுள்ளார், இதன்மூலம் மனஅமைதி கிடைக்கும் என சில்வெஸ்டர் ஸ்டாலன் நம்புகிறாராம்.
 
அவரே வந்தால் பரபரப்பாகிவிடும் என்பதால், குடும்பத்தினரை மட்டும் அவர் இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

-பிரியாவாசு-

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!