வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (16/10/2015)

கடைசி தொடர்பு:17:38 (16/10/2015)

ரசிகர்களுக்கு ஷாருக்கானின் பிறந்தநாள் ட்ரீட்!

ஷாருக்கானுக்கு உலகமெங்கிலும் கோடிகணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஷாருக் படம் ரிலீஸ் என்றால் இந்தி மட்டும் அல்ல, இங்கு தமிழ் ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்ப்பு இருக்கும். அப்படி தன்னுடைய ரசிகர்களை குஷி படுத்த 'ஃபேன்' படத்தின் இரண்டாவது டீஸரை தனது பிறந்தநாளில் வெளியிட முடிவுசெய்துள்ளாராம் ஷாருக்.

ஆதித்யா சோப்ராவின், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மணீஷ் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் டீஸர் ஜூலை 9 ஆம் தேதி வெளியிடப்பட்டு பெரும் வரவேற்ப்பைப் பெற்றது, இதில் ஷாருக் இரு வேடங்களில் நடித்திருப்பதையும், இரண்டாவது டீஸரில் படத்தின் கதை எதை பற்றியது என்பதையும் கூறும் என்று படத்தின் எடிட்டர் நம்ரதா ராவ் கூறியுள்ளார்.

நவம்பர் 2ல் தனது 50வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் ஷாருக் தற்போது ரோஹித் ஷெட்டியின் 'தில்வாலே' படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கஜோலுடன் நடித்து வருகிறார். ஷாருக், கஜோல் , பெரும் அளவில் ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. 

-பிரியாவாசு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்