ரஜினியைக் காப்பியடிக்கிறாரா சல்மான்கான்? | Sylvester Stallone to act in Salman Khan's Next

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (19/10/2015)

கடைசி தொடர்பு:15:37 (19/10/2015)

ரஜினியைக் காப்பியடிக்கிறாரா சல்மான்கான்?

பாலிவுட் நடிகர்கள் கோலிவுட்டில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதும், அதேபோல் நம் தமிழ் நடிகர்கள், அங்கு சென்று சிறப்புத்தோற்றத்தில் சிறப்பிப்பதும் வழக்கமாக நடைபெறும் நிகழ்வு தான். ஆனால் தற்போது ஹாலிவுட் நடிகர்கள் தமிழ், இந்திப் படங்களில் நடிக்க அழைக்கும் அளவிற்கு இந்திய சினிமா வளரத்துவங்கிவிட்டது.

தமிழில் எந்திரன் 2 படத்தில் அர்னால்ட் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியில் சல்மான் நடிக்கும் சுல்தான் படத்தில் நடிக்க சில்வெஸ்டர் ஸ்டாலோனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் சல்மானுக்கு ரெஸ்ட்லிங் கற்றுத்தரும் பயிற்சியாளராக நடிக்க ஸ்டாலோனிடம் கேட்க  இருப்பதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாகவே சில்வஸ்டர், பம்மல் கே சம்பந்தம் இந்தி ரீமேக்கான கம்பக்கத் இஸ்க் படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார், ஆனால் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடிக்கும் அளவிற்கு அந்த கதாபாத்திரம் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இல்லை என்று அப்போது கருதப்பட்டது.

தற்போது மீண்டும் நடித்தால் அந்த கதாபாத்திரம் அவருக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது பலரது கருத்து, எனினும் இத்தகவல் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்றாலும் நெருப்பில்லாமல் புகையாது என்பதால், ரஜினி படத்துக்கு அர்னால்ட் வருகிறார் என்றவுடன் தன் படத்துக்கும் ஒரு ஹாலிவுட் நடிகரைக் கூட்டிவர சல்மான் நினைக்கிறார் என்ற கருத்தும், ரஜினியைப் பார்த்து சல்மான் காப்பியடிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுகிறது.

-பிரியாவாசு- 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close