வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (24/10/2015)

கடைசி தொடர்பு:13:47 (24/10/2015)

சல்மான் படம் வேதாளத்துக்குப் போட்டியா?

சமீபகாலமாக பிறமொழிப்படங்கள் தமிழுக்கு டப்பாகி வெளியாவது அதிகரித்து வருகிறது. ஷாருக்கானின் படங்கள் மட்டுமே முன்பெல்லாம் தமிழுக்கு டப்பாகும் பிறகு மகேஷ் பாபு அவ்வளவுதான். தற்போது அமீர்கான், ஹ்ருத்திக் ரோஷன், ராம் சரண், பிரபாஸ் என வரிசை கட்டி தமிழைக் குறி வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் அடுத்தகட்டமாக சல்மான்கான் தமிழ் மொழியைக் குறி வைத்துள்ளார். அவர் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகவிருக்கும் 'பிரேம் ரத்தன் தான் பயோ' படம் தமிழில் 'மெய் மறந்தேன் பாராயோ' என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.

தீபாவளி சிறப்பாக இங்கே அஜித்தின் வேதாளம், கமலின் தூங்காவனம் ஆகிய இரு பெரிய படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இவ்விரு படங்களுக்கு இடையில் தற்போது சல்மான்கானின் மெய் மறந்தேன் பாராயோ படமும் வெளியாகிறது.

இந்தப்படம் மிகப்பெரிய பொருட்செலவில், குடும்பப்படமாக அண்ணன் தங்கைப் பாசத்தை பிரதானமாக வைத்து உருவாகியுள்ளது. வேதாளம் படமும் அண்ணன் தங்கைப் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்