ஷாருக்கான் ரசிகரா நீங்கள்...இதோ ஸ்னீக் பீக்! | SharukKhan- Kajol's Dilwale Movie Sneak Peek Has released

வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (27/10/2015)

கடைசி தொடர்பு:11:19 (27/10/2015)

ஷாருக்கான் ரசிகரா நீங்கள்...இதோ ஸ்னீக் பீக்!

தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் 20 ஆண்டுகளைக் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்போது அடுத்த கட்டமாக மீண்டும் இந்த எவர் க்ரீன் ஜோடி இணைந்துள்ளது. ஷாருக் - காஜோல் இந்தக் கூட்டணிக்கு இந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.

இந்நிலையில் தில்வாலே படத்தின் போஸ்டரையாவது வெளியிடுவார்களா என்ற ரசிகர்களின் ஆவலுக்கு தீனி போடும் வகையில், படத்தின் ஸ்னீக் பீக் எனப்படும் மறைமுகக் கண்ணோட்டம் வெளியாகியுள்ளது.

 

அதில் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளுடன் க்ளைமாக்ஸ் சீன்கள் ஒரு சில விநாடிகளில் கடந்து செல்கின்றன. இது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டக்கூடியதாக இருக்கிறது.ரோஹித் ஷெட்டி இயக்கும் இப்படத்தை ரோஹித்துடன் இணைந்து தயாரிக்கிறார் கௌரி கான். 

 

ஸ்னீக் பீக் வீடியோவிற்கு: 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close