வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (28/10/2015)

கடைசி தொடர்பு:13:01 (28/10/2015)

பெண்களுக்கு கோபம் வந்தால் என்ன ஆகும்? விருதுகளை குவித்து வரும் இந்தியப் படம்! (வீடியோ இணைப்பு)

பான்நலின் இயக்கத்தில் சந்தியா மிரிதுல், தன்னிஷ்தா சட்டர்ஜி, சாரா ஜேன் , அனுஷ்கா மன்சண்டா, அம்ரித் மெஹ்ரா நடிப்பில், இந்தியில் வெளியாகவுள்ள படம் தான் ஆங்ரி இந்தியன் காட்டஸஸ் (கோபக்கார இந்திய பெண் தெய்வங்கள்).

ஆண்கள் போல் பெண்களும் சுதந்திரமாக நண்பர்கள் வட்டம், அநியாயத்தைக் கண்டு பொங்கி தட்டிக் கேட்பது, மேலும் ஆண்களை பார்த்தால் விசில் அடிப்பது இப்படி பெண்கள் உண்மையில் ஆண்களுக்கு சமமாக மாறினால் என்ன நடக்கும்.

 

தங்களுக்கு நடக்கும் பிரச்னைகள் குறித்து தட்டிக் கேட்டால், அதன் விளைவு என்ன என்பதே படத்தின் கரு. பான்நலின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில் அதற்குள் உலக அரங்கில் விருதுகளைக் குவிக்கத் துவங்கியுள்ளது.

டொரண்டோ திரைப்பட விழாவில் கலந்துகொண்டு மக்கள் தேர்வு விருதைப் பெற்றுள்ளது. அதேபோல் ரோம் திரைப்பட விழா, பி.என்.எல் மக்கள் தேர்வு விருதையும் பெற்றுள்ளது.

படத்தின் டிரெய்லர்: 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்