இதுதான் என் வாழ்வின் சிறந்த தருணம் - ஐஸ்வர்யா ராய் பச்சன் நெகிழ்ச்சி!

தனது குழந்தை ஆரத்யாவின் பள்ளிவிழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன் கல்வி குறித்தும், குழந்தைகளுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் பேசியுள்ளார். மேலும் இந்த விழாவில் சில்பா ஷெட்டியும் தனது குழந்தையின் தாயாகக் கலந்துகொண்டுள்ளார்.

ஐஸ்வர்யாராய் பச்சன் ஜாஸ்பா படம் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டும் ஐஸ்வர்யாராய் பச்சன் ஒரு தாயாக ஆரத்யாவின் அம்மா என அறிமுகப்படுத்திக்கொள்வதில் சந்தோஷம் எனக்கூறி ஆரம்பித்தவர். மேலும் ஒரு மேடையில் ஆரத்யாவின் அம்மா என என்னை அழைத்தது தான் என வாழ்வில் மிகச்சிறந்த தருணம் எனலாம் எனக் கூறி நெகிழ்ந்தார். கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் என்னவாக ஆகிறோம், என்ன சாதனை படைக்கப் போகிறோம் என்பதெல்லாம் அப்புறம் எனினும் அடிப்படைக் கல்வி கண்டிப்பாக எல்லாக் குழந்தைகளுக்கும் அவசியம்.

எனக்கு நல்ல கல்வி கொடுத்த எனது பெற்றோர்களுக்கு நன்றி. அதே சவால் இப்போது எனக்கு இருக்கிறது. என் குழந்தைக்கு நான் நல்ல கல்வி கொடுக்கிறேன் என நம்புகிறேன். ஒரு பெற்றோராக மாறிய பிறகுதான் அதன் கடினம், பொறுப்புகள் நமக்குத் தெரியவரும். எனக்கும் என் குழந்தையை முதல் முறையாக உலகம் சுற்ற அனுப்பிய வேளை மிகவும் சவலாகவே இருந்தது எனக் கூறியவர்.

இது வெறும் பிளே ஸ்கூல் எனக் கூறி விட முடியாது. வீட்டிற்குள் இருக்கும் குழந்தை தன்னை மக்களுடன் தொடர்புபடுத்தி வாழ்வில் அடுத்த அடி எடுத்து வைக்க நடக்கும் முதல் பயிற்சி இது எனக் கூறியவர் ஒவ்வொரு ஆசிரியையும் தனித்தனியாக பெயர் சொல்லி தனது நன்றியைக் கூறினார் ஐஸ்வர்யா ராய் பச்சன். சில்பா ஷெட்டி பேசுகையில் நான் பேச நினைத்த அனைத்தையும் ஒரு தாயாக மிக அழகாகப் பேசி விட்டார் ஐஸ்வர்யா ராய். ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள் எனக் கூறி விடைபெற்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!