சல்மானுக்குக் கல்யாணமா..மீண்டும் கிசுகிசுவில் அடுத்த நாயகி?

பாலிவுட் சூப்பர் கான் சல்மான் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கம். எனினும் இவரது வாழ்க்கையில் ஐஸ்வர்யா ராயும், காத்ரீனா கைஃபும் தான் அதிக நாட்கள் கிசுகிசுவில் சிக்கினர். மேலும் சல்மானும் சம்மந்தப்பட்ட நாயகிகளும் இதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் அவரவர் வாழ்க்கையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

பின்னர் சல்மான்கான் பொதுவாக தன்னுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுடன் கொஞ்சம் நெருக்கம் காட்டுவதும், நட்பாகப் பழகுவதும் சகஜமாக நடக்கும். ஆனால் நடிகைகளுடன் கொஞ்சம் அதிகமாகவே கிசுகிசுக்களில் சிக்கிவிடுவார். அப்படித்தான் இவருடன் நடித்த அசின், ஜாக்குலீன் ஃபெர்னாண்டஸ், என சில நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கினார்.

தற்போது சம்பந்தமே இல்லாமல் வெளிநாடு வாழ் நடிகை ஒருவர் சல்மானுடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். ரோம் நாட்டின் டிவி நடிகை லுலியா வாண்டுருடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். சல்மானின் தோழியான லுலியாவுடன் தற்போது விரைவில் கல்யாணம் என்ற செய்தி சுற்றலில் உள்ளது.

இதுகுறித்து தற்போது சல்மான் பதிலளித்துள்ளார் அவர் பேசுகையில், ‘எனக்கு இது பழகி விட்டது. எப்போதும் எந்த அடிப்படையும் இல்லாமல் வதந்திகள் பரப்புவது. இது எனக்கு பெரிதாக எந்தப் பாதிப்பும் தரப்போவதில்லை. எனினும் என் குடும்பத்தை இது பாதிக்கும். அதற்காகவேனும் பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளேன். இந்த வதந்திகள் யாவும் உண்மையில்லை. மேலும் அவர் எனக்கு நல்ல தோழி எனக் கூறியுள்ளார் பஜ்ராங்கி நாயகன். தீபாவளிக்கு இந்தி, தமிழ் என ஒரே நேரத்தில் வெளியாக உள்ள பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் புரமோஷன் வேலைகளில் தற்சமயம் செம பிசியாக இருக்கிறார் சல்மான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!