ஃபாஸ்ட் &ஃபியூரியஸ் வாய்ப்பை நிராகரித்த தீபிகா படுகோனே... அதிர்ச்சித் தகவல்!

தமிழ், தெலுங்கு என கலக்கும் நாயகிகள் பாலிவுட்டில் கால் பாதிக்க நினைப்பது எப்போதும் நடக்கும் விஷயமே. அதே போல் பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் ஹாலிவுட் கனவுகளில் இருப்பதும் இயல்பான ஒன்றே.தற்போது  இந்தியின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே, ஹாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற மாமி (MAMI) திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தீபிகா, முன்னதாக தனக்கு ஒருமுறை ஹாலிவுட்டிலிருந்து வந்த வாய்ப்பினை தவற விட்டதாகவும், ஆனால் தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

 

2013 ல் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 படத்தில் நடிக்க தீபிகாவிடம் கேட்கப்பட்டுள்ளது, ஆனால் அப்போது அவர் ராம் லீலா படத்தில் பிஸியாக இருந்த காரணத்தால் அந்த வாய்ப்பினைத் தவறவிட்டாராம்.தற்போது, மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பினை தான் எதிர்பார்த்து இருப்பதாகக் கூறியுள்ளார்.

ஏற்கனவே பாலிவுட்டிலிருந்து பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ மூலம் உலக பிரபலம் அடைந்துவிட்டார். இவருக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஓரிரு ஹாலிவுட் படங்களில் நடித்தும் விட்டார் இந்நிலையில் தீபிகாவும் ஹாலிவுட் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தீபிகா நவம்பர் 27 அன்று ரிலீஸாக இருக்கும் தனது தமாஷா மற்றும் பஜிராவோ மஸ்தானி பட வேலைகளிலும், புரமோஷன்களிலும் பிஸியாக உள்ளார். பஜிராவோ மஸ்தானி  டிசம்பர் மாதம்  ஷாருக் கான், கஜோல் நடிப்பில் வெளியாக இருக்கும் தில்வாலே படத்துடன் போட்டியிட இருப்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

எப்படி வேண்டுமானாலும் சரி ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் வாய்ப்பை தீபிகா படுகோனே நிராகரித்துள்ளார் எனக் கேட்ட பலருக்கும் இது அதிர்ச்சியான செய்தியாக மாறியுள்ளது. மேலும் இதே பாணியில் ஐஸ்வர்யா ராய் ஜேம்ஸ் பாண்ட் பட வாய்ப்பை ஒருமுறை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. 

- பிரியாவாசு- 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!