விஜய்யும் அஜித்தும் இப்படிச் செய்வார்களா?

நேற்று பாலிவுட்டின் கிங் கான் ஷாருக் தனது 50 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் தமது வாழ்த்துகளைக் கூறினர். சல்மான் ஷாருக்கின் வீட்டுக்கே சென்று சுல்தான் பாணியில் ஷாருக்கை இறுக்கிக் கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை ஷாருக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ய அது இணையத்தை கலக்குகிறது. நம்மூரில் விஜய், அஜித் பிறந்தநாளுக்கோ அல்லது அஜித் விஜய் பிறந்தநாளுக்கோ தொலைபேசியில் வாழ்த்துக் கூறினாலே, அது ரசிகர்களை குஷி படுத்துகையில், இப்படி இறுக்கிக் கட்டிப்பிடித்து, தனது அன்பினை வெளிப்படுத்தி, ரசிகர்களைக் குதூகலப்படுத்தியுள்ளனர் பாலிவுட்டின் இரண்டு முன்னணி நடிகர்களான ஷாருக் மற்றும் சல்மான்.

சல்மான் தனது பிரேம் ரத்தன் தான் பாயோ பட புரமோசன் வேலைகளிலும், ஷாருக் டிசம்பரில் வெளி வர இருக்கும் தில்வாலே பட வேலைகளிலும் பிஸியாக உள்ளனர்.

நேற்று ஷாருக் பிறந்தநாளில், அவருடைய ரசிகர்களைக் குஷிபடுத்தும் விதமாக அவரது ஃபேன் படத்தின் இரண்டாவது டீஸர் வெளியிடப்பட்டது.

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!