சிக்கலில் சிக்கிய ஷாருக் கான்!

தனது 50 வது பிறந்தநாளை நவம்பர் 2ம் தேதி கொண்டாடிய பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில், இந்தியாவில் சகிப்பு தன்மை குறைந்துவிட்டது என்று கூற, அது தற்போது பூதாகரமான பிரச்சனையாக மாறியுள்ளது.

ஷாருக் கான் கூறியதை பிஜேபி யின் தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா விமர்சித்துள்ளது தான் பிரச்சனைக்கு காரணம். ஷாருக்கான் இந்தியாவில் இருக்கிறார் ஆனால் அவரது மனமோ பாகிஸ்தானில் உள்ளது எனவும், மேலும் அவர் ஒரு தேசத் துரோகி எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். எனினும் யூனியன் மினிஸ்டர் பிரகாஷ் ஜவடேகர் இதற்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு, கைலாஷ் விஜய்வர்கியாவின் இந்த விமர்சனத்தை பிஜேபி ஒப்புகொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஷாருக்கின் ஹாலிவுட் பிரவேசம் பற்றிய கேள்விக்கு, இத்தனை வருடத்தில் தனக்கு ஹாலிவுட் வாய்ப்பு ஒருமுறை கூட வந்ததில்லை எனவும்,அப்படி ஹாலிவுட் படத்தில் நடிப்பதாய் இருந்தால், நிச்சயம் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் திரைப்படத்தில் தான் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

அனைவரின் மதிப்பையும், மரியாதையையும் பெற்றிருக்கும் ஷாருக் கான் பற்றிய இந்த சர்ச்சை அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பிரியாவாசு-

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!