பாலிவுட்டின் பாகுபலி படத்துக்கு 66 அடியில் கலக்கல் போஸ்டர்! | Bajirao Mastani poster in 62feet

வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (05/11/2015)

கடைசி தொடர்பு:19:02 (05/11/2015)

பாலிவுட்டின் பாகுபலி படத்துக்கு 66 அடியில் கலக்கல் போஸ்டர்!

 பஜிராவோ மஸ்தானி படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. 66 அடி உள்ள இந்த போஸ்டரில் ரன்வீர் சிங் கம்பீரமாக காட்சியளித்து தில்வாலே படத்துடன் தான் மோதத் தயார் என்பதை உணர்த்துவதுபோல் உள்ளது. போஸ்டரை மேளதாள வாத்தியங்களுடன் ரன்வீர் சிங் நடனமாடி வெளியிட்டுள்ளனர். 

 பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாய், 120 கோடி செலவில் உருவாகி வரும் வரலாற்றுப் படம் பஜிராவோ மஸ்தானி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் இப்படத்தில் ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே போன்றோர்  நடித்துள்ளனர். நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வமான போஸ்டர் வெளியிடப்பட்டது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த போஸ்டர், சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது.
 
முன்னதாக இப்படத்தில் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராய் பச்சனும் நடிக்க இருந்தது, அவர்கள் நடிக்க மறுக்கவே பின் ரன்வீர், பிரியங்கா, தீபிகா போன்றோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பிடித்தனர். டிசம்பர் 18 ம் தேதி இந்தி, மராத்தி மொழிகளில் வெளியாக உள்ள இப்படம், ஷாருக், கஜோல் நடிப்பில் அதே நாளில் வெளியாகும் தில்வாலே படத்துடன் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close