எங்களைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை - சல்மான் கான் காட்டம்! | Don't concentrate on our personal life - Salman Khan Says

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (06/11/2015)

கடைசி தொடர்பு:18:59 (06/11/2015)

எங்களைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை - சல்மான் கான் காட்டம்!

பிரபலங்களின் படங்களைக் காட்டிலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்கையில் நடக்கும் விஷயங்களை தெரிந்துகொள்வதில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம். அதிலும் இரு முன்னணி நடிகர்களிடையே உள்ள நட்பு, விரோதம் போன்ற விஷயங்களில் சின்ன சலசலப்பு ஏற்பட்டாலும், அது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அப்படி அண்மையில் அனைவரையும் முணுமுணுக்க வைத்த விஷயம் சல்மான், அமீர் கான் இடையே ஏற்பட்ட சிறு வாய்ச் சண்டை மோதல். ஆனால், தனக்கும் அமீர் கானுக்கும் எந்தச் சண்டையும் இல்லை என சல்மான் கூறியுள்ளார். எங்களது நட்பினைக் காட்டிலும், நாட்டில் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. மக்கள் முக்கியமான விஷயங்களை விட்டுவிட்டு எங்களுக்கிடையே உள்ள நட்பினை பேசிகொண்டிருகின்றனர்.

 

நாங்கள் வெறும் திரை நட்சத்திரங்கள் தான், எங்கள் வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் அவ்வளவு தான் என்று கூறியுள்ளார். அமீர் நடிக்கும் டங்கால் மற்றும் சுல்தான் இரண்டையும் ஒப்பிட்டுப் பேச எதுவும் இல்லை, இரண்டும் வேறுவேறு கதைகள். நாங்கள் என்ன, எதில் நடித்து கொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்.

இரண்டுமே சிறந்த கதை அம்சம் கொண்ட படங்கள், ரசிகர்கள் இரண்டையுமே கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், அதைத் தவிர இதை பற்றி பேச வேறு ஏதும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் சல்மான்.

-பிரியாவாசு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்