தொடரும் ரசிகர்கள் சண்டை...எங்கே போகிறது இந்தியா!

 இங்கே முதல் நாள் வசூல் கத்தியா, வேதாளமா என சண்டைகள் நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில் பாலிவுட்டிலும் உங்க ஹீரோ படம் ஹிட்டா எங்க ஹீரோ படம் ஹிட்டா என ட்ரெண்டை உருவாக்கி சண்டையிட்டு வருகிறார்கள். சல்மான்கான் , ஷாருக்கான் ரசிகர்கள். 

சமீபத்தில் வெளியான பிரேம் ரத்தன் தான் பயோ படத்திற்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்புகள் கிடைத்து மீண்டும் ஓபனிங் கிங் என சல்மான் கான் நிரூபித்து வரும் நிலையில் புது ட்ரெண்ட் ஒன்று ட்விட்டரில் நம் கண்களை இழுத்தன. பிறகு தான் தெரிந்தது அது ஷாருக்கானின் ரசிகர்கள் செய்த வேலையென்று.

 

ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படம் முதல் நாள் 45 கோடிகளை வசூலித்த நிலையில், பிரேம் ரத்தன் தான் பயோ படம் 40கோடிகளை வசூலித்ததாக செய்திகள் வெளியாக ரசிகர்கள் ட்ரெண்ட்டை உருவாக்கிவிட்டனர். அதில் #HNY45crPRDP42cr என தற்போது இந்திய ட்ரெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே தான் அஜித் விஜய் ரசிகர்கள் மீடியாக்களைக் கூட அவர்களின் நாயகன்கள் குறித்து பேசக்கூடாது என கூறிவரும் நிலையில் அங்கேயும் அதே போல் சண்டை வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கள் நடிகர்களை உண்மையில் இவர்கள் பாதுகாக்கிறார்களா அல்லது இவர்களின் இணையச் சண்டைக்கு தீணியாக்கிவிட்டார்களா என்றே தோன்றுகிறது. சம்மந்தப்பட்ட நடிகர்களே கூட இவர்கள் மத்தியில் இப்போது கருத்து சொல்ல பயந்தாக வேண்டிய நிலையில் தான் இந்திய சினிமா டாப் நடிகர்களின் நிலை உள்ளது என்றால் அது மிகையாகாது. ஏன் இப்போது இந்தச் செய்திக்குக் கூட கண்டிப்பாக கீழே ஒரு பிரச்னை நடக்கும் என்பது யாவரும் அறிந்த உண்மையே. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!