பேத்திக்கு அமிதாப்பச்சனின் அன்புப்பரிசு! | Amitabh Bachchan Pens Down A Beautiful Poem For Grand-daughter

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (17/11/2015)

கடைசி தொடர்பு:17:42 (17/11/2015)

பேத்திக்கு அமிதாப்பச்சனின் அன்புப்பரிசு!

ஐஸ்வர்யா ராய் , அபிஷேக் பச்சனின் மகள் ஆரத்யாவின் மகளுக்கு 4 வயதாகிறது. நவம்பர் 16ம் தேதியான நேற்று ஆரத்யாவின் பிறந்தநாள். முதல் பிறந்தநாளுக்கு பி.எம்.டபிள்.யூ காரை பரிசாகக் கொடுத்த அமிதாப் பச்சன் இந்த முறை பேத்திக்கு அழகான கவிதை ஒன்றைப் பரிசாக எழுதி கொடுத்துள்ளார்.

அமிதாப் நன்றாக கவிதை எழுதுவார் என்பது யாவரும் அறிந்ததே. சமீபகாலங்களாக தன் பேனாவிற்கு வேலை கொடுக்காமல் இருந்த அமிதாப் தற்போது தன் பேத்திக்காக கவிதை ஒன்றை எழுதிக் கொடுத்துள்ளார்.

கவிதை தன் பேத்திக்காக மட்டுமல்லாமல் எல்லா குழந்தைகளையும் மையமாக வைத்து எழுதியுள்ளார். குழந்தைகள் கவுன் போட்ட ஜீனியஸ்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் செய்யும் எதுவுமே அதிசயம் தான் என்பது போல பல வர்ணனைகள் அந்தக் கவிதையில் இடம்பிடித்துள்ளன. மேலும் குழந்தைகள் தினம் இப்போது தான் முடிவடைந்துள்ள நிலையில் இந்தக் கவிதை இன்னும் பொருத்தமாகவே அமைந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close