பாலிவுட்டைத் தெறிக்கவிடும் ஷாருக்-கஜோல் ’தில்வாலே’ பாடல்!

ஷாருக்கான், கஜோல் நடிப்பில் உருவான தில்வாலே படத்தின் ’ரங் தே து மொஹி கேறுவா’ பாடல் நேற்று இரவு வெளியானது.  12 மணி நேரத்திற்குள் 6 லட்சம் பேர் பார்த்து வைரலாகியுள்ளது இந்த வீடியோ. ஐந்துவருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சேர்ந்துள்ள ஷாருக், கஜோல் ஜோடியின் கெமிஸ்ட்ரி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கடைசியாக  ’மை நேம் இஸ் கான்’ படத்தில் 2010 தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு தற்போது வெளியாகி உள்ள இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக இவர்கள் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த பாடல்கள் வரிசையில் இப்பாடலும் இடம் பிடிப்பது உறுதியே.

எ காலி காலி காகென், ஜாத்தி ஹூன் மெயின் , தூஜே தேக்ஹா தொ எ ஜானா சனம், சூரஜ் ஹுவா மத்தம் போன்ற பாடல்களைப் போலவே இப்பாடலிலும் இருவரது கெமிஸ்ட்ரி மிகப் பெரிய பலம். 50 வயதிலும் இத்தனை இளமையாகத் தெரியும் ஷாருக், செக்ஸி கஜோல், பிரித்தம் இன் இசை, பாராஹ் கானின் கோரியோக்ராபி, அர்ஜித் சிங் இன் ரொமாண்டிக் குரல் ஆகிய அத்தனையும் இணைந்து பாடலை திரும்பத் திரும்பக் கேட்க வைக்கின்றன.

ஐஸ்லாந்தின் அழகினை தனது கேமரா மூலம்  அப்படியே தந்துள்ளார் ஒளிபதிவாளர் டுட்லே, பாடலின் ஒவ்வொரு காட்சியுலும் ஐஸ்லாந்தின் அழகு சொட்டுகிறது. கண்களை இமைக்கக் கூட இடம் விடவில்லை இயக்குநர் ரோஹித் ஷெட்டி. இப்பாடலைப் பற்றிய தங்களது கருத்துகளை ட்விட்டரில் ரசிகர்கள் பதிவு செய்தவண்ணம் உள்ளனர். இவருடத்தின் சிறந்த காதல் பாடல்கள் வரிசையில் இப்பாடல் நிச்சயம் முதல் இடத்தை பிடிக்கும் என ரசிகர்கள் தங்களது ஏகோபித்த கருத்துகளைத் தெரிவிக்க ட்விட்டர், முகநூல் என ட்ரெண்டாகியுள்ளது. ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் இப்படம், தற்போது இப்பாடலின் மூலம் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 18ல் இப்படம் வெளிவர இருக்கிறது.

வீடியோப் பாடலைக் காண:

- பிரியாவாசு - 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!