பாடகி அவதாரமெடுத்த ரஜினியின் நாயகி | Actress Sonakshi Sinha singing reality show Indian Idol Junior

வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (20/11/2015)

கடைசி தொடர்பு:14:18 (20/11/2015)

பாடகி அவதாரமெடுத்த ரஜினியின் நாயகி

ரஜினியின் லிங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. தபாங், பிரபுதேவா  இயக்கிய ரவுடி ரத்தோர் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அகிரா மற்றும்  ஃ போர்ஸ் 2  படங்களில் நடிக்கிறார். 

இவர் தற்போது பாடகியாக புது அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக ஆடை வடிவமைப்பாளராக இருந்து, பின் நடிகையானவர், தற்போது பாடகியாகவும் மாறியுள்ளார். இந்தியன் ஐடியல் ஜூனியர், எனப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த இவர், இஷ்க்ஹோளிக் எனும் பாடலைப் பாடியுள்ளார்.

இளைஞர்களைக் கவரும் வகையில் ஹிப் ஹாப்பாக இப்பாடல் உருவாகியுள்ளதாம். மேலும் சோனாக்ஷி இதில் சில ராப்பும் பாடியுள்ளதாக டி சீரீஸ் நிறுவனத்தின் தலைவர் புஷன்  குமார் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close