படமாக உருவாகிறது, இளசுகளுக்குப் பிடித்த சேத்தன்பகத்தின் கதை

மாதவ் ஜா, ரியா சோமானி இந்த கேரக்டர் பெயர்கள் கண்டிப்பாக சேத்தன் பகத்தின் ரசிகர்களுக்கு நல்ல பழக்கம். சேத்தன் பகத்தின் ஹாஃப் கேர்ள்ஃப்ரண்ட் நாவலின் நாயகன் நாயகி கேரக்டர்களே இந்த மாதவ் ஜா, ரியா சோமானி.

பிகாரின் கிராமத்து இளைஞனுக்கு விளையாட்டுக் கோட்டாவில் டெல்லியின் மிகப்பெரிய கல்லூரியில் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அங்கு எல்லாம் ஆங்கில மயம். ஆங்கிலம் தெரியாத மாதவ் ஜா சந்திக்கும் மேல்த்தட்டு மக்கள் வாழ்க்கைகள். அவனுக்கு தோழியாக கிட்டத்தட்ட மிக நெருங்கிய தோழியாக கிடைக்கும் ரியா இவர்களுக்குள் நடக்கும் நட்பு, காதல் என்பதே ஹாஃப் கேர்ள்ஃப்ரண்ட் கதை.

ஒருதலைக் காதலனாக மாதவ் ஜா அனுபவிக்கும் துன்பங்களும், நிகழ்வுகளும் கதையின் பலம். அதிகம் விற்பனையான இந்த நாவல் தற்போது படமாக உருவாக இருக்கிறது.

இதற்கு முன் 3 இடியட்ஸ் (தமிழில் நண்பன்),ஹெல்லோ, காய் போ சி, 2 ஸ்டேட்ஸ், இப்படி வரிசையாக சேத்தன் பகத்தின் கதைகள் படமாகி ஹிட்டடித்தது நாமறிந்ததே.

இப்போது ஹாஃப் கேர்ள் ஃப்ரண்ட் நாவலும் படமாக உருவாக இருக்கிறது.  இயக்க இருக்கிறார் மோஹித் சூரி. சுஷந்த் சிங் நாயகனாகவும், க்ரிதி சனோன் நாயகியாகவும் தேர்வாகியுள்ளனர். மேலும் க்ரிதி சனோன் கண்டிப்பாக இக்கதைக்கு சரியான தேர்வு என கூறியுள்ளார் மோஹித்.

மோஹித் சூரி இதற்கு முன் மர்டர் 2, ஆஷிக் 2, ஏக் வில்லன், ஹமாரி அதூரி கஹானி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!