அடுத்த பாகுபலியா பஜிராவோ மஸ்தானி!

பாலிவுட்டின் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பாஜிராவோ மஸ்தானி’. வரலாற்றுப் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தினை தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப் செய்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தமிழில் மொழி பெயர்க்கும் பொறுப்பினை பாடலாசிரியர் மதன் கார்க்கியும், தெலுங்கில் ராமஜோகய்யா சாஸ்திரியும் ஏற்றுள்ளனர். மராத்திய மன்னர் பேஷ்வா பாஜிராவோ மற்றும் அவரது இரண்டாவது மனைவி மஸ்தானியின் காதல் கலந்த வரலாற்றுப் படம் தான் பாஜிராவோ மஸ்தானி.

இதில் ரன்வீர் சிங் பேஷ்வாவாகவும், தீபிகா மஸ்தானியாகவும் பிரியங்கா முதல் மனைவி கஷிபாயாகவும் நடித்துள்ளனர்.

ஹம் தில் தே சுக்கி சனம், தேவ்தாஸ், ப்ளாக், மேரி கோம், கப்பர் இஸ் பேக் போன்ற வெற்றிப் படங்களை தந்தவர் சஞ்சய்லீலா பன்சாலி என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெரும் அளவில் உள்ளது. தெலுங்கிலிருந்தும், ஹிந்தியிலிருந்தும் படங்கள் தமிழில் டப் செய்து வெளியாவது அவ்வப்போது அதிகரித்துள்ளன.

சல்மான் நடிப்பில் வெளியான பிரேம் ரத்தன் தான் பாயோ வரிசையில் தற்போது இப்படமும் இடம் பிடித்துள்ளது. மேலும் அரசர் காலப் படங்களுக்கு பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

-பிரியாவாசு- 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!