இருபதைத் தொடுவதே என் குறிக்கோள்...அமிதாப்பச்சன் அதிரடி | Amitabh Bachchan reached 18m followers in Twitter

வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (27/11/2015)

கடைசி தொடர்பு:18:02 (27/11/2015)

இருபதைத் தொடுவதே என் குறிக்கோள்...அமிதாப்பச்சன் அதிரடி

பிரபல பாலிவுட் நடிகர், பிக் பி அமிதாப்பச்சனை, ட்விட்டர் பக்கத்தில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 18 மில்லியனை தொட்டது. எப்போதும் சமூக வலைதளங்களின் மூலம் தன்னைப் பற்றியும் தனது  படங்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டு ரசிகர்களிடம் தொடர்பிலேயே இருப்பவர் அமிதாப்பச்சன்.

தற்போது 18 மில்லியன் ரசிகர்கள் அவரைப் பின்தொடர்வதாக, மகிழ்ச்சி அடைந்த அவர், தனது ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார், மேலும் 20 மில்லியன் தொடுவதே தனது அடுத்த குறிக்கோள் என்றும் கூறியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பாலிவுட்டின் கிங்  ஷாருக்கானை 16.4 மில்லியன் பேர் பின்தொடருகின்றனராம்.

 73 வயதிலும் அசாத்தியமான தனது நடிப்பினால் ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் அமிதாப் அடுத்ததாக பிஜாய் நம்பியார் இயக்கத்தில் "வாசிர் " படத்திலும், பால்கி இயக்கத்தில் உருவாகும் "கி அண்ட் கா" படத்தில் தனது மனைவி ஜெயா பச்சனுடன் சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கிறார், இப்படம் அடுத்த ஆண்டு வெளிவர உள்ளது.

-பிரியாவாசு- 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close