“பேரிடரை எதிர்த்து போராடும் பலம் வேண்டும்” இறைவனிடம் வேண்டும் ஷாருக்!

சென்னையில் பெய்த கனமழையால், மக்கள் பெரும் துயரத்தையும் பாதிப்பையும் சந்தித்துள்ளனர். இந்தியளவில் பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்துவருவது மட்டுமில்லாமல், கடவுளிடம் பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.

ஷாருக்கான் தன்னுடைய ட்விட்டரில், “ என்னுடைய சகோதர சகோதரிகள் சென்னையில் இருக்கிறார்கள். இயற்கையின் பேரிடரால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு அதை எதிர்த்துபோராடும் பலத்தை தரவேண்டும்” என்று இறைவனிடம் வேண்டுவதாக ட்விட் செய்துள்ளார்.

மேலும், இந்தி திரையுல கலைஞர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், வருண்தவான், மல்லிகா ஷராவத், சோனாக்‌ஷி சின்ஹா, அனில்கபூர் உள்ளிட்ட பலரும் சென்னை மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்துவருகின்றனர்.

விரைவில் சென்னை மீண்டுவரவேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!