ஷாருக்கான் சென்னை நிவாரணத்திற்கு 40 கோடி தரப்போகிறாரா?

சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் கனமழையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு, அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற நிவாரணப் பொருட்களாகவும், லட்சங்களில் பணமாகவும் விஷால், சித்தார்த், பார்த்திபன், அல்லு அர்ஜுன், ராணா, என நடிகர் நடிகைகள் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட்டின் நடிகர் நடிகையர் சென்னை வெள்ளத்தை நினைத்து வருத்தமடைந்து ட்வீட்டுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

ஷாருக்கான் இவர்களையெல்லாம் மிஞ்சி வரும் டிசம்பர் 12ம் தேதி வெளியாக உள்ள தில்வாலே படத்தின் முதல் நாள் கலெக்‌ஷனை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்கவிருக்கிறார், சாதாரணமாகவே ஷாருக்கான் படங்களுக்கு 35 முதல் 45 கோடி வரை முதல் நாள் கலெக்‌ஷனாக வரும் என்பது நாமறிந்ததே.

கடைசியாக வெளியான ஹேப்பி நியூ இயர் படத்தின் முதல் நாள் வசூல் 45 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷாருக்கான், கஜோல் நடிப்பில் வெளியாக உள்ள ‘தில்வாலே’ படத்துக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருப்பதால். இது உண்மையெனில் குறைந்தபட்சம் 20கோடிகள் சென்னைக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் நல்லதே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!