வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (09/12/2015)

கடைசி தொடர்பு:12:52 (09/12/2015)

ஷங்கர்மகாதேவன் நலமாக இருக்கிறார் - அவருடைய மகன் தகவல்

தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, மராத்தி, கன்னடம் என ஆறு மொழிகளிலும் பாடி, நான்கு தேசிய விருதுகளை வென்ற பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகங்களைக் கொண்ட ஷங்கர் மகாதேவன்  மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரை, மேலும் சில தினங்களுக்கு ஓய்வில் இருக்கும் படி மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அவரது உடல்நிலைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும், இன்னும் சில தினங்களில் அவர் மும்பை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் தொடர்ந்து இரண்டு முறை மாரடைப்பு வந்ததாகவும் மகாதேவனின் நெருங்கிய உறவினர்கள் கூறுகின்றனர். தற்பொழுது இவருக்கு 48 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவருடைய மகன் சித்தார்த் கூறும்போது, “ உடல் சோர்வினால் தான் மாரடைப்பு வந்திருக்கிறது. முதன் முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையும் மருத்துவமனையில் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த இதய அடைப்பும் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. உடல்நலம் சரியாகிக்கொண்டிருப்பதால் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்” என்று கூறினார்.

தமிழில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான்,  தேவா, யுவன் ஷங்கர் ராஜா , ஹாரிஸ் ஜெயராஜ் , வித்யாசாகர் , மணி  ஷர்மா, தேவி ஸ்ரீ பிரசாத் , ஜி.வி. பிரகாஷ்  குமார் , விஜய்ஆண்டனி , இமான் , தமன் , அனிருத்  போன்ற அனைத்து இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்