ராணிமுகர்ஜிக்கு கடவுளின் பரிசு

பாலிவுட் நடிகையான ராணிமுகர்ஜிக்கு இன்று காலையில் அழகிய பெண்குழந்தை பிறந்தது. மும்பை மருத்துவமனையில் குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவன தலைவரான ஆதித்யாசோப்ராவுடன் கடந்த வருடம் ஏப்ரலில் ராணிமுகர்ஜிக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மும்பையில் பிரபல ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலையில் பெண்குழந்தை  பிறந்தது.  அக்குழந்தைக்கு “ஆதிரா” என்று பெயர் வைத்துள்ளனர்.

ஆதிரா பிறந்தது கடவுளின் மிகச்சிறந்த பரிசு என்று ராணிமுகர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய ரசிகர்களுக்கும், உறவினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தற்பொழுது ராணிமுகர்ஜிக்கு 37 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!