அம்மாடியோவ்.....இந்த வருஷம் ஷாருக்கும், சல்மானும் சம்பாதிச்சது இவ்வளவா?

2015ம் வருடம் முடிவை நெருங்கி விட்டது. 2016 துவங்க உள்ள நிலையில் பல சர்வேக்கள் படையெடுக்கத் துவங்கிவிடும். இதில் முதல் கட்டமாக யார் அதிகம் இந்த வருடம் சம்பாதித்தவர்கள் என்ற விபரம் வெளியாகியுள்ளது.ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில்  சினிமா பிரபலங்களும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுமே அதிகமாக  இடம்பிடித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் இருந்த சல்மான் கான் இந்த முறை இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தில் பாலிவுட்டின் கிங் கான் நடிகர் ஷாருக்கான் 257 கோடிகளுடன் இருக்கிறார். சல்மான் கான் 202 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், அமிதாப் பச்சன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து தோனி , அமீர்கான், அக்‌ஷய் குமார், விராட் கோலி, சச்சின், தீபிகா படுகோன், ஹ்ருத்திக் ரோஷன் முறையே முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து இந்த 100 பேர் கொண்ட பட்டியலில் 19 புது வரவுகளும் அடக்கம். அதில் முக்கியமாக ராஜமௌலி, பிரபாஸ் இருவரும் முதல்முறையாக இடம்பிடித்துள்ளனர். காரணம் சொல்லவா வேண்டும் பாகுபலியே எனலாம். இது தவிர்த்து சஞ்சய் லீலா பன்சாலி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் தங்களது இடங்களை தவறவிட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் அரசியல் பிரமுகர்கள் தென்படவேயில்லையே என நீங்கள் நினைக்கிறீர்களா?... அவர்களின் வருமானங்கள் என்னைக்கு பாஸ் கணக்கில் காட்டப்பட்டன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!