இங்கே கேக் சாப்பிடும் செலின், அங்கே லிப்ஸ்டிக் போடும் நர்கிஸ்!

பிரேமம் படம் வெளியாகி 200 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் படத்திற்கு கிடைத்த பாராட்டுகளும், படம் குறித்த செய்திகளும் அடங்கிய பாடில்லை. மேலும் எங்கே எந்த இளசுகளின் சந்திப்பு நடந்தாலும் முதல் கேள்வி பிரேமம் பார்த்தாச்சா. டிவிடி இருக்கா என்பதுதான்.

இந்நிலையில் சமீபகாலமாக பிரேமம் மலர் டீச்சர் கேரக்டர் இணையத்தை பரபரப்பாக்கின. இதனையடுத்து நிவின் பாலிக்கு ஜோடியான செலின் கேரக்டரில் நடித்த மடோனா செபஸ்டியன் கேக் சாப்பிடும் புகைப்படம் இணைய வெளியில் பட்டையைக் கிளப்பி வருகிறது.

பலரும் தங்கள் முகநூல், ட்விட்டர்களில் 'செலின் சார், கேக் சாப்பிடுது சார்' ரேஞ்சுக்கு வருணிக்கத் துவங்கியுள்ளனர். இங்கே செலின் ஃபீவர் என்றால் இந்தியிலோ நர்கிஸ் ஃபக்ரி லிப்ஸ்டிக் போடும் புகைப்படம் இதே பாணியில் சுற்றி வருகிறது.

இவர் சாகசம் படத்தில் பிரசாந்துடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல பாலிவுட் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. அக்‌ஷய் குமாரின் ‘ஹவுஸ் ஃபுல்3’ படத்தின் படப்பிடிப்பிற்காக நர்கிஸ் மேக்கப்பில் இருக்க, கருப்பு நிற டாப், நீல நிற ஜீன் சகிதமாக கையில் மேக்கப் உபகரணத்துடன் லிப்ஸ்டிக் போடும் புகைப்படத்தை நர்கிஸ் பகிர சூடு பிடித்துவிட்டது சமூக வலைகள். நர்கிஸ் சார், லிப்ஸ்டிக் போடுது சார்... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!