1 கோடி நிவாரண நிதி அளித்த அக்‌ஷய் குமார்

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். சினிமா நடிகர்களாக சித்தார்த், நடிகர் சங்கம், பார்த்திபன், மயில்சாமி, தெலுங்கு நடிகர்கள் ராணா, அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, பவன் கல்யாண் உட்பட பலரும் உதவிக்கரம் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாலிவுட் டாப் நடிகர் ஷாருக்கான் ஒரு கோடி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து அக்‌ஷய் குமாரும் சென்னை நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாயைக் கொடுத்துள்ளார். இயக்குநர் பிரியதர்ஷன் மூலமாக சுஹாசினி மணிரத்னத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

சுஹாசினி மணிரத்னம் வழிகாட்டுதலில் ஜெயேந்திரா நிர்வாக அறங்காவலரின் பூமிகா அறக்கட்டளைக்கு ருபாய் 1 கோடி ருபாய் காசோலையை அக்‌ஷய் குமார் அளித்துள்ளார். பூமிகா அறக்கட்டளை சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு கொடுத்து வருகிறது. தற்போது அக்‌ஷய் குமார் கத்தி படத்தின் இந்தி ரீமேக்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!