வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (16/12/2015)

கடைசி தொடர்பு:14:50 (16/12/2015)

ஆஸ்கர் தாமதமாகக் கிடைத்துவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மானைப் புகழும் ஹைதர் இயக்குநர்

ஷிஃபாலி புஷன் இயக்கத்தில் உருவாகிவரும் பாலிவுட் படம் ‘ஜுக்னி’. இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் புரமோஷன் சந்திப்பில் பேசிய பிரபல பாலிவுட் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், இயக்குநர் விஷால் பரத்வாஜ் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து புகழ்ந்துள்ளார்.

இந்திய இசையின் சூழலில் ஒரு பெரிய மாற்றம் உண்டானது எனில் அது ஏ.ஆர்.ரஹ்மான் வரவுக்குப் பிறகே. எனக்கும் நன்றாக நினைவு இருக்கிறது ரோஜா படத்தின் பாடல்கள் வெளியான போது ஏற்பட்ட இசை மாற்றங்களை நன்கு அறிவேன்.

அவருடைய திறமைக்கும் , இசையறிவுக்கும் ஆஸ்கர் விருது தாமதமாகக் கிடைத்துவிட்டது என்றே கூற வேண்டும். இந்திய சினிமாவில் சர்வதேச தரத்தைக் கொண்டு வந்தவர் கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானே என புகழ்ந்துள்ளார் விஷால் பரத்வாஜ். இவர் புகழ்பெற்ற ஹைதர், காமினீ, இஷ்க்யா, உள்ளிட்ட படங்களை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்