வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (16/12/2015)

கடைசி தொடர்பு:17:19 (16/12/2015)

நல்ல நடிகை யார்? தீபிகா படுகோன் கருத்தை ஏற்பார்களா நம்மூர் நாயகிகள்?

ஒவ்வொரு வருடமும் குறைந்தது 3 முதல் 4 படங்களில் சர்வசாதாரணமாக நடிப்பவர் தீபிகா படுகோன், அப்படித்தான் இந்த வருடமும் வித்தியாசமான நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக அமிதாப் பச்சனுடன் ‘பிகு’, ரன்பீர் கபூருடன் ‘தமாஷா’, மற்றும் வரவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படமான ‘பஜிராவோ மஸ்தாணி’ என ஒரு நடிகையாக தன்னை முதன்மைப் படுத்திய படங்களை தேர்வு செய்து நடித்தார்.

தற்போது மிக ஆச்சர்யமான சூழல் என்னவென்றால் தீபிகா படுகோன் இந்த நாள் வரை 2016க்கான ஒரு படத்தில் கூட ஒப்பந்தம் ஆகவில்லை என்பதுதான். இதற்கு அவர் சொல்லும் காரணம் இதுதான்.

ஒரு நல்ல நடிகை என்பவர் கை நிறையப் படங்கள் வைத்துக்கொண்டு தன்னை பிசியாகக் காட்டிக்கொள்வதில் இல்லை. அதை நான் தீவிரமாகப் பின்பற்றுபவள். முதலில் எனக்குப் பிடித்த கதையாக இருக்க வேண்டும்.

நிறைய கதைகள் வருகின்றன , எனக்கு எந்தக் கதை மீதும் ஈர்ப்பு ஏற்படவில்லை. என்னை ஒரு நாயகியாக நான் இந்தத் துறையில் நிரூபித்துவிட்டேன். இனி நான் அடுத்த படம் இது, அதற்கடுத்து இது என தினம் செய்திகளில் அடிபட வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே பொறுமையாகக் காத்திருந்து படங்களைத் தேர்வு செய்ய நினைக்கிறேன்  எனக் கூறியுள்ள தீபிகா படுகோன் தூம்3, வாய்ப்பை நிராகரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல நடிகைகள் வருடம் முழுவதும் கை நிறையப் படங்களை வைத்துக்கொண்டு இருப்பதோடு நித்தமும் தன்னைப் பற்றி ஏதேனும் செய்திகளும் , வதந்திகளும் வந்த வண்ணம் இருக்க வேண்டும் என நினைக்கும் திரையுலகில் தீபிகாவின் பதில் ஆச்சர்யத்தையே கொடுக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்