ஷாருக்கான் கொடுத்த ஷாக்...நடக்குமா இவரது ஆசை!

டிசம்பர் 18 அன்று ரிலீஸாக இருக்கும் தனது 'தில்வாலே' படத்தின் ப்ரமோசன் வேலைகளில் படு பிஸியாக ஓடிகொண்டிருக்கும் ஷாருக்கான், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அனைவரையும் ஆச்சரியத்திலும், வியப்பிலும் ஆழ்த்தும் வகையில் பதிலளித்துள்ளார்.

ஷாருக்கான் மற்றும் கஜோலை அடுத்து பாலிவுட்டின் சிறந்த ஜோடி யார் என்ற கேள்விக்கு, பட்டென தனது மகன் அப்ரம் மற்றும் ஐஸ்வர்யாராயின் மகள் ஆராத்யா, இருவரும் திரையில் காண அழகாக இருப்பார்கள் என்று பதிலளித்துள்ளார். தொடர்ந்து கஜோல் இதற்கு அப்ரம், ஆராத்யாவை விட வயதில் சிறியவன் என்று கூறியதற்கு, காதலுக்கு வயதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஷாருக் மற்றும் ஐஸ்வர்யாவின் பிள்ளைகளை ஜோடியாக திரையில் காண நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகமாகவே இருக்கும், ஆனால் ஷாருக் இப்போதே அதைப் பற்றி பேசி ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டுள்ளார். மேலும் காதலுக்கு வயதில்லை என்பது இவர் திரையில் சொல்கிறாரா அல்லது நிஜத்திலா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. 

இந்திய , ஆஸ்திரேலியா , நார்வே, பாகிஸ்தான் , மியான்மர் , அமெரிக்கா, பிரிட்டன் என 60 நாடுகளில் தில்வாலே நாளை வெளியாகிறது. 140 கோடி செலவில் எடுக்கபட்டுள்ள இப்படத்தின் வசூல் 1000 கோடியை தாண்டும் என எதிர்பார்ப்பதாகவும் ஷாருக் கூறியுள்ளார்.

 

-பிரியாவாசு -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!