நடிகையின் புகைப்படம்...கொந்தளிக்கும் சமூகவலைதளங்கள்!

அமெரிக்க மாடல் மற்றும் பாலிவுட் நடிகையுமான நர்கிஸ் ஃபக்ரி நடித்த ஒரு விளம்பர படம், பாகிஸ்தானின் முன்னணி செய்தித் தாளான ஜாங் பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்துள்ளது. இதற்கு அந்நாட்டின் பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது . நர்கிஸ் இப்புகைப்படத்தில் சிகப்பு நிற ஆடை அணிந்து படுத்தபடி கையில் ஒரு மொபைல் ஃபோனுடன் காட்சியளிக்கிறார்.

ஒரு செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இது போன்ற விளம்பரப் படம் வந்திருப்பது இழிவானது மேலும் அபத்தமானது என அங்கு உள்ள பத்திரிகையாளர்கள் தங்களது எதிர்ப்பினை ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதில் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அன்சர் அப்பாசி என்பவர் முதலில் தனது எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து மேலும் எதிர்ப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 

அன்சர் அப்பாசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜங் பத்திரியில் வந்துள்ள விளம்பரத்திற்கு எனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்கிறேன் என்று ட்விட் செய்துள்ளார். இதனை அடுத்து இன்று நர்கிஸின் புகைப்படம் நாளை சன்னி லியோனின் புகைப்படத்தைக் கூட வெளியிடுவார்கள் போல. ஜங் பத்திரகை இதற்காக வெட்கப் படவேண்டும்.

இது போன்ற புகைப்படங்கள் ப்ளேபாய் அல்லது பிற இதழ்களின் வந்தால் நன்றாக இருக்கும், அதை விடுத்து ஒரு செய்தித்தாளில் வருவது நல்லது அல்ல என்று பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பெண்களையும் விளம்பர பொருட்களையும் சம்மந்தமே இல்லாமல் சம்மந்தப்படுத்தி, அதற்கு முன்னணி நடிகைகள் நடித்து, விளம்பரங்கள் வருவது புதிதல்ல என்றாலும் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் அவ்விளம்பரம் வந்திருப்பதே இந்த எதிர்ப்புகளுக்கு காரணம் என கண்டங்கள் வலுத்து வருகின்றன. 

- பிரியாவாசு -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!