வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (09/01/2016)

கடைசி தொடர்பு:15:56 (09/01/2016)

மீண்டும் சட்டையில்லாமல் போஸ்... ஷாருக்கான் மகனால் பரபரப்பு

ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் இன்ஸ்டாக்ராம் தளத்தில் தன் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பு சட்டையில்லாமல் ஆர்யன் கான் பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது மீண்டும் இவர் நண்பர்களுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட பெண் ரசிகைகள் பலரும் ஆர்யனை புகழ்ந்து வருகிறார்கள். சிறு வயதில் அச்சு அசலாக ஷாருக்கானைப் பார்த்த தோற்றத்தில் இருக்கும் ஆர்யன் கான் இதற்கு முன்பு தன் சின்ன தம்பியை தலைகீழாகத் தொங்கவிட்டபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நாவெலி நந்தாவுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர சமூக வலைதளங்கள் செம பிஸியாக மாறியது. மேலும் விரைவில் கரண் ஜோஹர் ஆர்யனை வைத்து ஒரு படம் எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்