எதிர்பார்ப்பில் ஆஷிகி 3 - ஹீரோவாக ஹ்ருத்திக் ரோஷன்!

மனதை அள்ளும் பாடல்கள், காதல் , ரொமான்ஸ் என பாலிவுட் ரசிகர்களை மட்டுமல்லாது தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்த பாலிவுட் படங்களில் ஆஷிகி பட சீரிஸ்களும் ஒன்று. மகேஷ் பட் இயக்கத்தில் ராகுல் ராய், அனு அகர்வால் நடித்த ஆஷிகி முதல் சீரிஸ் நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகளைக் குவித்தது.

அடுத்த பாகமான ஆஷிகி2 , மோகித் சூரி இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், ஷ்ரதா கபூர் நடிப்பில் நான்கு ஃப்லிம்ஃபேர் விருதுகள், நான்கு IIFA விருதுகள், மற்றும் மூன்று ஸ்க்ரீன் விருதுகளைப் பெற்றது. இந்நிலையில் ஆஷிகி 3 உருவாகவிருக்கிறது.

நாயகனாக ஹ்ரித்திக் ரோஷனும், நாயகியாக சோனம் கபூரும் நடிக்க இருக்கிறார்கள்.

இதற்கு முன் நாயகியாக தீபிகா படுகோன் நடிப்பார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் பஜிராவோ மஸ்தாணி, தமாஷா படங்களை அடுத்து இன்னும் எந்தப் படத்திலும் தான் ஒப்பந்தம் ஆகவில்லை என சமீபத்திய சந்திப்பில் தீபிகா படுகோனேவே கூறியுள்ளார்.முந்தைய பாகங்களைப் போல் சாதனை படைக்குமா ஆஷிகி 3 பொறுத்திருந்து பார்ப்போம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!