இந்தியில் தயாராகிறது இரண்டாம்பாகம்,என்ன செய்யப் போகிறார் கமல்? | Director Rajkumar Hirani to direct biopic of Sanjay Dutt

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (12/01/2016)

கடைசி தொடர்பு:16:14 (12/01/2016)

இந்தியில் தயாராகிறது இரண்டாம்பாகம்,என்ன செய்யப் போகிறார் கமல்?

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இறுதிச்சுற்று படத்தை, இந்தியில் "சாலா காதூஸ்’ படமாக வெளியிட இருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. முன்னா பாய் எம்பிபிஎஸ்(2003), லேகே ரஹோ முன்னாபாய் (2006), 3 இடியட்ஸ் (2009), பிகே போன்ற பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராஜ்குமார் ஹிரானி. சால காதூஸிற்குப் பிறகு சஞ்சய் தத்தின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவுள்ளார். முன்னதாக முன்னா பாய் எம்பிபிஎஸ், லேகே ரஹோ முன்னாபாய் போன்ற படங்களில் சஞ்சய் தத்தை இயக்கிய இவர், தற்போது அவரின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக இயக்க உள்ளார். 

சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவருடைய சினிமா வாழ்க்கை, மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத் சிக்கியது என பல விஷயங்கள் படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.தனது தண்டனைக் காலம் முடிந்து அடுத்த மாதம் இறுதியில் சஞ்சய் தத் வெளியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி மெகா ஹிட் முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது. இதில் ரன்பீர் கபூர் மற்றும் தீபிகா படுகோன் நடிக்க உள்ளனர் என்கிறார்கள். ஆனால் இதைப் பற்றி ஹிரானி கூறுகையில், இன்னும் படத்தில் ரன்பீர் தவிற வேறு யாரும், முடிவாகவில்லை, ஜனவரி 29 சாலா காதூஸின் வெளியிட்டிற்கு பின்னரே இது பற்றி முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துளளார்,

இந்தி முன்னா பாய் எம்பிஎஸ் படமே தமிழில் வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆக வெளியானது என்ற நிலையில் அங்கே பாகம் 2 எடுக்கப்பட இருக்கிறது. இங்கே கமல் வசூல் ராஜா எம்பிபிஎஸை மீண்டும் கையில் எடுப்பாரா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.

-பிரியாவாசு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close