Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமிதாப்பை முந்திய ரன்வீர் சிங்!

2015 பிலிம்ஃபேர் விருதுகள் நாமினேஷன் பட்டியல் தயாராகிவிட்டது. அதிக இடங்களைப் பிடித்துள்ளன பாஜிராவ் மஸ்தானி, பிகு, பத்லபூர் படங்கள்.

இந்தியாவில் சினிமாக்களைப் பொருத்தமட்டில் தேசிய விருதுகளை அடுத்து பிலிம்ஃபேர் விருதுகள் முக்கிய விருதாகக் கருதப்படுகிறது. தற்போது 61வது பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் விழா ஜனவரி 15 அன்று நடைபெற உள்ளன, இதற்கான நாமினேஷன் பட்டியல் தற்போது வெளியப்பட்டுள்ளது.

இதில் 2015ன் இறுதியில் வெளியான சஞ்சய் லீலா பன்சாலியின் " பாஜிராவ் மஸ்தானி" மற்றும் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிகு படங்கள் அதிக இடங்களை பிடித்துள்ளன. பாஜிராவ் மஸ்தானி சிறந்த படம், சிறந்த இயக்குனர், உள்ளிட்ட 8 விருதுகளிலும், பத்லபூர் 6 விருதுகளுக்காகவும், பிகு, ஷாருக், கஜோல் நடிப்பில் வெளியான "தில்வாலே’,  மாதவன், கங்கனா ரனாவத் நடித்த "தணு வெட்ஸ் மனு ரிடன்ஸ் படங்கள் முறையே 5 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் சல்மான்கான் நடிப்பில் வெளியாகி அதிகப் பாராட்டுதல்களையும், வசூலையும் குவித்த பஜ்ரங்கி பாய்ஜான் படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிகர் என 3 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 8 முறை பிலிம்ஃபேர் விருதுகளை சிறந்த நடிகருக்காகப் பெற்றுள்ள ஷாருக்கான் தில்வாலே படத்திற்காக சிறந்த நடிகருக்கான பட்டியலிலும், கஜோல் சிறந்த நடிகைக்கான பட்டியலிலும் இடம் பிடித்துள்ளனர், கஜோல் இதுவரை 5 பிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். இதே சஞ்சய் லீலா பன்சாலியின் தேவ்தாஸ் படத்திற்காக 10 விருதுகளும், ப்ளாக் படத்திற்கு 11 விருதுகளும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த முறை அந்தச் சாதனையை மீண்டும் தக்கவைப்பாரா சஞ்சய் லீலா பன்சாலி பார்க்கலாம்?!

-பிரியாவாசு-

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்