இளம்பெண்ணை அறைந்த நடிகர் மீது வழக்கு!

இந்தியில் தேசிய விருது பெற்ற நடிகரான நவாசுதீன் சித்திக், தனது வீட்டருகில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஜ்ராங்கி பாய்ஜான், பத்லபூர், தலாஷ், கஹாணி , பாம்பே டாக்கீஸ் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர் நவாசுதின் சித்திக். இவர் மும்பையின் , அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார், அவர் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டின் பார்கிங் பகுதியில் இருசக்கர வாகனம் நிறுத்த வேண்டிய இடத்தில் நவாசுதின் தனது காரை நிறுத்தியுள்ளார்.

இதனால் அதே அபார்ட்மெண்டில் தங்கியிருக்கும் ஹீனா என்ற இளம்பெண்ணுக்கும் , நவாசுதினுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் நவாசுதீன் ஹீனாவை கன்னத்தில் அறைந்து விட்டார். மேலும் அறைந்ததில் அப்பெண்ணின் மொபைல் போன் கீழே தவறி விழுந்து சேதமும் ஆகியிருக்கிறது.

இந்நிலையில் கண்கலங்கி துடித்த அப்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் விசாரித்ததில் நவாசுதின் அறைந்தது உண்மை எனத் தெரியவர அவர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைகள், மற்றும் சமூக நல அமைப்புகள் என நவாசுதினின் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!