இந்தியாவில் மட்டும் தான் இது நடக்கும்...கூகுளின் நெகிழ வைக்கும் படம்!

அக்டோபர் 10ம் தேதி சனிக்கிழமை அன்றைய ஒரு நாளை தேர்வு செய்து மொபைல் வீடியோவாகவோ, அல்லது கேமராக்களிலோ அழகிய படமாக எடுத்து ஒரு நாளில் இந்தியா (INDIA IN A DAY) என்ற தலைப்பில் கூகுள் உருவாக்க உள்ள முழு நீளப்படத்தில் பங்களிப்பளிக்கும்படி கூகுள் அறிவித்தது. இதனையடுத்து பலரும் இந்தியாவின் தங்கள் ஒரு நாளை படமாக எடுத்து அனுப்பியுள்ளனர்.

இந்தப்படம் குடியரசு தின சிறப்பாக வெளியாக உள்ளது. இந்தப்படத்தை இயக்குகிறார் ரிச்சி மேத்தா. இணை தயாரிப்பாளராக அனுராக் கஷ்யப். ரிட்லி ஸ்காட், மற்றும் முழு படமும் உங்களால் உருவாக்கப்பட்டது என டைட்டிலில் விழுகிறது. இந்தியாவுக்கு பல முகங்கள் உள்ளன, பல பாஷைகள் உள்ளன. ஆனாலும் இந்தியர்களுக்குள் மட்டும் தான் பகிர்தல் , நட்பு, உறவு, ஏன் நட்பைக் கூட உறவாக பார்க்கும் பாங்கு இருக்கிறது.

 கலாச்சாரம், இலக்கியம், மனிதம் இப்படி இந்தியாவின் பல முகங்களை விளக்கப் போகிறது அந்தப் படம். முதற்கட்டமாக இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. அதில் இளைஞன் ஒருவர், தன் கிராமத்தில் தான் மட்டுமே படித்தவர், தான் மட்டுமே ஆங்கிலம் பேசத் தெரிந்தவர் என்கிறார், இன்னொருவரோ இதுதான் எங்கள் வீடு. எங்கள் ஏரியாவில் இண்டெர்நெட் கிடையாது. ஒரு வைபை கனெக்‌ஷனில் ஐந்து குடும்பங்கள் பகிர்ந்துகொண்டு பயன்படுத்துகிறோம் என இந்தியாவின் சில எதிர்மறையான முகங்களாக இருந்தாலும் அதையும் நேர்மறையாக மாற்றிக்கொள்ளும் இந்தியர்களை பிரதிபலிக்கிறது அந்த முன்னோட்டம். ஜனவரி 26ம் தேதி வெளியாகவுள்ள முழுமையான ஆவணப்படத்திற்கு இணையதள வாசிகள் பலரும் காத்திருக்கிறார்கள் என்றே கூறலாம்.இந்தியாவில் பிறந்ததற்கு நான் பெருமைப் படுகிறேன் என்ற வாசகமும் கொண்டுள்ளது அந்த 3 நிமிடங்கள் 54 நொடிகள் கொண்ட வீடியோ! 

 முன்னோட்டத்தைக் காண: 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!