சன்னி லியோனிடம் அடுக்கடுக்காக கேள்விகள்...சமூகவலைதள வாசிகள், நடிகர்கள் கொதிப்பு!

பிரபல நடிகை சன்னி லியோனிடம், தொலைகாட்சி பேட்டி ஒன்றின் போது ஆபாசமாகவும், அனைவரும் முகம் சுளிக்கும் வகையிலும் கேட்டகப்பட்ட கேள்விகளால் பெரும் பரபரப்புகள் கிளம்பியுள்ளன. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான "பிக் பாஸ்"ல் கலந்து கொண்ட சன்னிலியோன், பின்னர் ஜிஸ்ம்2 படத்தின் மூலம் பாலிவுட் நடிகையாக தனது பயணத்தை தொடங்கினார்.

தற்போது ஜனவரி 29ல் வெளியாக உள்ள தனது மஸ்திஜாடே படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அப்படி ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளர் மற்றும் நிருபர் ஒருவர் சன்னி லியோனிடம் கேட்ட கேள்விகள், பல பாலிவுட் பிரபலங்களை கொதித்தெழ செய்துள்ளது. " தங்களது படங்களை பார்க்க நிறைய திருமணமான பெண்களின் கணவர்கள் வருகின்றனரே, அதை பற்றி நீங்கள் கவலைப்படுவதே இல்லையா?, நீங்கள் அமீர் கானுடன் பணியாற்ற விரும்புவிர்கள் ஆனால் அமீர் கான் தங்களுடன் பணியாற்ற விரும்புவார?, உங்களால் இந்திய அறநெறி கெடுதலுக்கு உள்ளாகியுள்ளது என, பாராளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவர், பாராளுமன்றத்தில் கூறியதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டிர்கள்? நீங்கள் ஒரு முன்னால் பாலியல் படம் சார்ந்த தொழிலாளி என ஒப்புக்கொள்கிறீர்களா? 

 இந்தியாவிற்கு தாங்கள் வந்ததிலிருந்து ஆபாச படங்களை பார்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே, இதற்கு தாங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறீர்களா போன்ற கேள்விகளை கேட்டுள்ளார். இதற்கு சன்னி நிதானமாகவும், அமைதியாகவும் பதிலளித்துள்ளதை பலர் பாராட்டினாலும், இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பலர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். என்னதான் சன்னி லியோன் ஆபாச படங்களில் நடிப்பவராக இருப்பினும் , அவரும் ஒரு மனிதர், பெண் என நினைக்காமல் இப்படியும் கேள்விகள் கேட்கலாமா? எனப் பலரும் கேள்விகள் எழுப்பியுள்ளனர். 

அந்த வீடியோவில் சன்னி லியோன் பல கேள்விகளுக்கு அமைதியாக சிரித்த வண்ணம் பதிலளிக்கிறார் என்றாலும் சில கேள்விகளுக்கு அவரால் மேற்கொண்டு பேச முடியாது தவிப்பதும் அப்பட்டமாகவே தெரிவது பலரையும் கோபமாக்கியுள்ளது. ஏற்கனவே மீடியாக்களை சாடும் பல பிரபலங்கள் மத்தியில் இப்போது சன்னி லியோனின் பிரச்னையும் பூதாகரமாக மாறியுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!