‘நான் இப்போ குடும்பப் பொண்ணு!’’ - சூப்பர் ஸ்மார்ட் சன்னி லியோன்

சன்னி லியோன்... இந்தியாவின் பிரத்யேக பெண். அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தாலும், இப்போது அவர் இந்திய கலாசாரத்தை கட்டிக் காக்க அவ்வளவு மெனக்கெடுகிறார்.  அமெரிக்காவில் செக்ஸ் நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கியவர், இப்போது பாலிவுட்டில் நம்பர் ஒன் ஹீரோயின். தனது வாழ்க்கையில் மட்டுமல்ல; மோடிக்குப் பிறகு கூகுள் சர்ச்சிலும் அதிகமாக அடிபட்டு முன்னுக்கு வந்த சன்னி லியோனை, இப்போது ‘போர்னோ ஆக்ட்ரஸ்’ என்று யாராவது சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வந்து விடுகிறது. ‘‘நான் இப்போ ஒரு குடும்பப் பெண்; எனக்கென்று ஒரு அழகான, செக்ஸியான கணவர் இருக்கிறார். எனவே, பெண்களே... என்னைப் பார்த்து மிரளாதீர்கள். உங்கள் கணவர் எனக்குத் தேவையில்லை!’’ என்று ‘தாட் பூட்’ குடும்பப் பெண்மணியாக அண்மையில் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி சேனலுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார்.


 


தமிழர்கள் தினமான பொங்கலன்று வந்த  அந்தப் பேட்டிதான், இப்போது இந்தியாவின் ஹாட் பரபர! நிருபரின் எடக்குமடக்கான பல கேள்விகளுக்கு லாவகமாகப் பதில் சொல்லி அசத்திய சன்னிலியோன், ‘‘பணத்துக்காகத்தானே நீங்கள் இப்படி ஒரு செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்தீர்கள்?’’ என்ற கேள்விக்கு, ‘‘நீங்கள்கூட பணத்துக்காகத்தானே என்னைப் பேட்டி எடுக்கிறீர்கள்?’’ என்று மடக்கினார்.


மேலும், ‘‘என் வாழ்க்கையில் நான் எதற்காகவும் வருத்தப்பட்டது இல்லை. நான் போர்னோ படங்களில் நடித்ததற்காகப் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், அதுதான் என்னை இப்படிப்பட்ட நல்லதொரு இடத்துக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. ஆனால், என்னைப் பற்றிய சீப்பான சில கமென்ட்கள் வரும்போது, கொஞ்சம் வேதனையாகத்தான் இருக்கிறது. நானும் ஒரு மனுஷிதானே... எனக்கும் உணர்வுகள் இருக்கத்தானே செய்யும். பல திருமணமான பெண்கள், என்னைப் பார்த்துப் பயப்படுவதாகச் சொல்கிறார்கள். தங்கள் கணவர்களை என்னிடமிருந்து பாதுகாப்பதாகச் சொல்கிறார்கள். பெண்களே, எனக்கு உங்களின் கணவர்கள் வேண்டாம். ஏனென்றால், எனக்கு அழகான, செக்ஸியான கணவர் இருக்கிறார். அவர் மிகவும் புத்திசாலி(!)’’ என்று பொங்கி எழுந்திருக்கிறார்.- தமிழ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!